நீலகிரியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!

நீலகிரியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!

தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வீடுகளில் புகுந்தன.

நீலகிரியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நீலகிரியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புளியம் பாறையில் கோழிக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

நீலகிரியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது!

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேவாலா பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் மண்சரிவு ஏற்படுதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.