திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால், 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

 

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால், 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் நிலக்கரி பாரம் ஏற்றிச்சென்ற லாரி பழுதானதால் தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை வழியாக அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால், 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை 10 மணி அளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றது. இதனால், திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தகவல் அறிந்த ஆசனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வாகனத்தை நகர்த்த முடியாததால், பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை சாலையோரத்திற்கு இழுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து, சுமார் 5 மணிநேரத்திற்கு பின் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியது.