உடல், மனம் புத்துணர்ச்சிக்கு பாரம்பரிய விளையாட்டு!

விளையாட்டு… அன்று போல் இன்றில்லை. சிறகடித்து பறந்த குழந்தைகள் கூண்டுக்கிளிகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஆடலும் பாடலும் இல்லை; ஒன்று கூடல் இல்லை. விட்டுக்கொடுத்தல் கிடையாது. உடல் மனமும் இயங்க சோம்பிக்கிடக்கிறது.

பாடலுடன் விளையாட்டு:
குலை குலையா முந்திரிக்கா… நரியே நரியே சுத்தி வா… கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்… கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி… – சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு இந்தப் பாடலைப் பாடியபடி விளையாடுவார்கள். எண்பது, தொண்ணூறுகளில் காணப்பட்ட இதுபோன்ற விளையாட்டுகளை இன்றைக்கு பார்க்கமுடியவில்லை. ஓடி ஆடி விளையாடும் இந்த விளையாட்டினால் உடலும் மனதும் சுறுசுறுப்படையும்.

இதுமட்டுமல்ல பல்லாங்குழி, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு என அனைத்து விளையாட்டுகளுமே தனிநபராக விளையாடும் விளையாட்டுகள் அல்ல. கூட்டமாகக் கூடி விளையாடும் இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் மகிழ்ந்திருந்தார்கள். தனிமை என்ற எண்ணம் விலக்கப்பட்டு மனமகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தார்கள்.

டெக்னாலஜி:
இன்றைக்கு உடலுக்கும் மனதுக்கும் தெம்பூட்டும்விதமான விளையாட்டுகளைப் பார்க்கமுடியவில்லை. செல்போனே கதி என்று மூழ்கிக் கிடக்கிறார்கள். என்னதான் எழுதினாலும், பேசினாலும் யாரும் கேட்பதில்லை. பல பெற்றோர் படித்துப் படித்து சொல்லியும் கேட்பதில்லை. தனது நண்பன் வீட்டில் அவனுக்கென்று தனியாக செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள், எனக்கு அப்படியா வாங்கித் தந்திருக்கிறீர்கள் என்று சொல்லும் குழந்தைகளைத்தான் பார்க்க முடிகிறது.

 

டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால் உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்டது. வானமும் வசப்படும் என்று சொல்வதைப்போல எல்லா விளையாட்டுகளும் செல்போனில் காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள் அதை ஒரு காரணமாக சொல்லிக்கொண்டு அதில் மூழ்கிக் கிடக்கிறார்கள். செல்போன் பார்ப்பதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் நீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் அதிலிருந்து வெளிவரும் கதிரியக்கங்களாலும் பாதிப்புகள் வரலாம். சில நேரங்களில் தவறுதலாக வேறு சில இணையத்துக்குள் நுழையும்போது ஆபாச வீடியோக்களை பார்க்க நேர்ந்தால் அந்த குழந்தைகளின் மனநிலை என்னாகும்?

பாரம்பரியம்:
மாறிவரும் உலகத்தில் சில மாற்றங்களை வரவேற்கலாம். ஆனால், சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள நேரிட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். உடலை வலுப்படுத்தும், மனதை வலுப்படுத்தும் நமது பாரம்பரிய விளையாட்டுகள் இருக்கும்போது ஏன் கேடு விளைவிக்கும் விளையாட்டுகளை நம் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல இன்றைய இளைய தலைமுறையும் குழந்தைகளும் இதுவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பாரம்பரிய உணவுகளைத் தேடி உண்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லித் தருகிறார்கள். அவற்றை மீட்டெடுத்து நம் குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் அனைவரும் நம்மை தயார்படுத்துவோம்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!