kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சீன அமெரிக்க பொருளாதார போர் சமீபகாலமாக உச்சத்தில் இருக்க பலகாரணங்கள் உண்டு

சீன அமெரிக்க
சீன அமெரிக்க
Loading...

அமெரிக்க பொருட்களுக்கான வரி , சீனாவின் வியாபார ஏக போகத்தை கட்டுபடுத்துதல், வடகொரியாவுக்கு ரகசிய ஆதரவளிக்கும் சீனாவினை கட்டுபடுத்துதல் என பல காரணம் உண்டு

இப்பொழுது நிறுவணத்தை குறிவைக்கும் விதமாக வெளிநாட்டு தொலைதொடர்பு சாதனங்களுக்கு தடை எனும் அளவில் சென்றுவிட்டது அமெரிக்க உச்ச பீடம்

america and china

ஒருவகையில் அமெரிக்காவில் இதற்கு ஆதரவும் இருக்கின்றது, பாதுகாப்பு தொடர்பான குழுக்கள் இதை வரவேற்கின்றார்கள்

உண்மையில் எதனால் சீனாவினை நெருக்குகின்றது அமெரிக்கா?

பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு சில பாதிப்பு சீனாவால் உண்டென்றாலும் அவர்கள் இப்படி பொங்கி எழ சில காரணங்கள் உண்டு என்கின்றார்கள் நிபுணர்கள்

குறிப்பாக சீனா விண்வெளி ஆதிக்கம் பெறுவதும், ஸ்டெல்த் எனப்படும் 5ம் தலைமுறை போர்விமான தயாரிப்பில் ஈடுபடுவதும் அமெரிக்காவுக்கு சரி என படவில்லை

america and china

மிக பெரும் அச்சுறுத்தலாக பிரமாண்ட போர்கப்பல் ஒன்றை சீனா கட்டுவதை அமெரிக்க செயற்கை கோள்களும் உளவு அமைப்புகளும் உறுதி செய்திருக்கின்றன‌

கடற்படை ரீதியாக சீனா பலம்பெற்றால் பசிபிக் கடலில் தான் ஆதிக்கம் செலுத்தமுடியா நிலை உருவாகலாம் என்கின்றது அமெரிக்க அறிக்கைகள்

எல்லாம் சேர்ந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் நேரம் வந்துவிட்டதாக அமெரிக்கா கருதுகின்றது, இன்னும் பல அதிரடிகளை அந்நாடு செய்யலாம் என்கின்றது சர்வதேச செய்திகள்

2018 TopTamilNews. All rights reserved.