மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியல்

 

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியல்

திருச்சி

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சியில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியல்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கண்டித்தும், வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கள் ஒன்றிணைந்து, எல்.ஐ.சி, போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, பி.எஸ்.என்.எல் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியல்

மேலும், திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்.பி.எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.