டிராக்டர் பேரணி வன்முறை : காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

 

டிராக்டர் பேரணி வன்முறை : காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வந்த விவசாயிகள் கடந்த 26ம் தேதி 3 லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தினர். மூன்று வழிகளில் மட்டுமே பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்த நிலையில், ஒரு குழு தடுப்புகளை அகற்றிவிட்டு மாற்றுப் பாதை வழியாக டெல்லிக்குள் நுழைந்தது. இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, டெல்லியே கலவர பூமியாக மாறியது.

டிராக்டர் பேரணி வன்முறை : காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

போலீசாரின் தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் அங்கிருந்த கோபுரத்தில் விவசாய கொடிகளை ஏற்றினர். வழக்கமாக தேசியக்கொடி ஏற்றப்படும் கோபுரங்களில் விவசாய கொடி ஏற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அடைந்தததோடு, விவசாயிகளும் காயமடைந்தனர்.

டிராக்டர் பேரணி வன்முறை : காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

அறவழியில் பல நாட்களாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் ஒரே நாளில் திசை மாறிப்போனது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என அறிவித்த பாரதிய கிசான் சங்கம், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டது. இதனிடையே டெல்லி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக எப்.ஐ.ஆரில் இடம் பெற்றிருப்போருக்கு டெல்லி காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய திட்டமிட்டிருக்கும் காவல்துறை, அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.