டிராக்டர் பேரணி கலவரம் : 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

 

டிராக்டர் பேரணி கலவரம் : 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற போராட்டம் குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி கலவரம் : 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியின் போது விதிகளை மீறியதாகக் கூறி பேரணி நடத்தியவர்களை போலீசார் தாக்கியதால், பதிலுக்கு விவசாயிகளும் போலீசாரை தாக்கினர். இதனால் அங்கு கலவரம் மூண்டது. கலவர பூமியாக மாறிய டெல்லி தொடர்பாக ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பின. இந்த நிலையில், கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து தவறான செய்திகளை சோஷியல் மீடியாக்களில் பரவியதாக பத்திரிகையாளர்கள் ரினல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட 6 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி கலவரம் : 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

நொய்டாவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தேசத் துரோகம், குற்றச் சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்த பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருப்தாக தெரிகிறது. இதே போல மத்திய பிரதேசத்திலும் 4 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் செய்திகளை பரப்பிய நிலையில், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டிருப்பதற்கு எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு கண்டனக் குரல் எழுப்பியுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக தவறான செய்தியை பரப்பிய ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு எதிராக, இந்தியா டுடே குழுமம் நடவடிக்கை எடுத்திருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.