டிராக்டர் ஓட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் ஆட்சியர்!

டிராக்டர் ஓட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் ஆட்சியர்!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடந்த டிராக்டர் பேரணியில், ஆட்சியர் கண்ணன் டிராக்டர் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று ஶ்ரீவில்லிப்புத்தூரில் மாவட்ட வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு டிராக்டர் பேரணி நடைபெற்றது.

டிராக்டர் ஓட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் ஆட்சியர்!

இதில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கண்ணன் கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், ஆட்சியரும் டிராக்டரை ஓட்டிச்சென்று பொதுமக்களிடையே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த டிராக்டர் பேரணி நகரின் முக்கிய வீதிகள் நடைபெற்றது. முன்னதாக, இந்த பேரணியில் பங்கேற்ற அனைவரும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்போம் என்றும் ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

டிராக்டர் ஓட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் ஆட்சியர்!

இதில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், வேளாண் துறை அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டருடன் கலந்துகொண்டனர்.