‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது’ – திமுக எம்.பி டி.ஆர் பாலு

 

‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது’ – திமுக எம்.பி டி.ஆர் பாலு

அதிமுகவில் பெரும் பிரச்னை நீட்டிப்பதால் தேர்தலுக்கு பின்னர் அந்த கட்சியே இருக்காது என திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில் அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடித்திருக்கிறது. அதாவது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் போட்டியிடுவது? என்ற பெருங்குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. இது தொடர்பாக நேற்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க பட்ட நிலையிலும், முதல்வர் வேட்பாளர் குறித்த தீர்வு எட்டப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் என கே.பி முனுசாமி அறிவித்திருக்கிறார்.

‘சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது’ – திமுக எம்.பி டி.ஆர் பாலு

இந்த நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது என்றும் தேர்தல் வருவதால் மக்கள் மீது கரிசனம் இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவில் இரட்டை தலைமை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர் பாலு, அதிமுக ஒரு கட்சியே இல்லை, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்றும் கூறினார்.