திமுக பொருளாளராகிறாரா டி.ஆர்.பாலு?

 

திமுக பொருளாளராகிறாரா டி.ஆர்.பாலு?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அந்த சமயம் திமுகவின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் காலமானார். அதனால் அந்த பதவி துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது.

இதனையடுத்து திமுக பொது செயலாளரை தேர்வு செய்ய, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் பதவிக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கும் அக்கட்சியினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக பொருளாளர் பொறுப்புக்கு திமுக மகளிரணி செயலாளார் கனிமொழியும், ஆ.ராசாவும் போட்டியிடவில்லை.

திமுக பொருளாளராகிறாரா டி.ஆர்.பாலு?

இந்நிலையில் திமுக பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று விண்ணப்ப விநியோகம் நடந்து முடிந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்
வெளியாகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கடந்த மார்ச் மாதம் துரைமுருகன் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடதக்கது.