அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது… அலறியடித்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கும் தயாநிதி, டி.ஆர்.பாலு!

 

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது… அலறியடித்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கும் தயாநிதி, டி.ஆர்.பாலு!

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி-க்கள் தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மனம் புண்படும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து அ.தி.மு.க அரசு பற்றி ஊழல் புகார் கூறிவந்த ஆர்.எஸ்.பாரதியை, தாழ்த்தப்பட்டோர் தொடர்பாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்தது சென்னை போலீஸ். ஆனால், நான்கு மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்துவிட்டார்.

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது… அலறியடித்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கும் தயாநிதி, டி.ஆர்.பாலு!
இந்த நிலையில் ஒன்றிணைவோம் வா மூல்ம பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளிக்கச் சென்ற தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோரை தலைமைச் செயலாளர் சண்முகம் அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் தங்களை தலைமைச் செயலாளர் நடத்திய விதம் பற்றி கூறிய வார்த்தைகள் தாழ்த்தப்பட்டவர்களை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டி.ஆர்.பாலு மீதும் புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.