இந்தியாவில் ராகுல் காந்தியால் மட்டுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும்… தெலங்கானா காங்கிரஸ்

இந்தியாவில் ராகுல் காந்தியால் மட்டுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும்… தெலங்கானா காங்கிரஸ்

இந்தியாவில் ராகுல் காந்தியில் மட்டுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும் என்று தெலங்கானா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த சனிக்கிழமையன்று அந்த கட்சியின் அதிருப்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் அடிக்கடி ஆலோசனை நடத்த கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கட்சி எந்தவொரு பொறுப்பு கொடுத்தாலும் அதனை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நன்றி தெரிவித்து தெலங்கானா பிரதேச காங்கிரஸ் பிரிவு சோனியா காந்தி கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ராகுல் காந்தியால் மட்டுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும்… தெலங்கானா காங்கிரஸ்
சோனியா காந்தி

ஆலோசனை கூட்டங்கள் (சிந்தன் பைதக்) நடத்த ஒப்புக்கொண்டமைக்காக நாங்கள் உங்களுக்கு (சோனியா காந்தி) நன்றி கூறுகிறோம். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியால் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க ஒப்புக் கொண்டதற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகத்தை ராகுல் காந்தியால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்தியாவில் ராகுல் காந்தியால் மட்டுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும்… தெலங்கானா காங்கிரஸ்
காங்கிரஸ்

விவசாயிகளின் எதிர்ப்பு, கொரோனா வைரஸ் தொற்று நிலவரம், வேலையின்மை, சர்வாதிகார ஆட்சி உள்ளிட்டவற்றால் நம் நாடு போராடும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், ராகுல் காந்தியை போன்ற இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரை நாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வழங்க வேண்டிய நேரம் இது. தற்போது நாடு நெருக்கடியான நிலையில் உள்ளது. தேசம் நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி நாட்டை காப்பாற்றியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.