டொயோட்டா, மகிந்திரா, அசோக் லேலண்ட் மே மாத வாகன விற்பனை

 

டொயோட்டா, மகிந்திரா, அசோக் லேலண்ட் மே மாத வாகன விற்பனை

கடந்த மே மாதத்தில் டொயோட்டா, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மொத்தம் 707 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதேசமயம் முந்தைய ஏப்ரல் மாதத்தில் 9,622 வாகனங்களை டொயோட்டா விற்பனை செய்து இருந்தது. 2020 மே மாதத்தில் 1,639 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் கடந்த மாதத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.

டொயோட்டா, மகிந்திரா, அசோக் லேலண்ட் மே மாத வாகன விற்பனை
மகிந்திரா கார்

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த மே மாதத்தில் மொத்தம் 17,447 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாத விற்பனையை காட்டிலும் 52 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 36,437 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டொயோட்டா, மகிந்திரா, அசோக் லேலண்ட் மே மாத வாகன விற்பனை
அசோக் லேலண்ட் வாகனங்கள்

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 3,199 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 மே மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 1,420 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.