வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை  தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை  தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வங்கக் கடலில் கடந்த 21ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக உருப்பெற்று நிவர் புயல் உருவானது. நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதையடுத்து கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையில் நிவர் புயல் கரையை கடந்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின.. அத்துடன் நிவர் புயலினால் கடுமையான பாதிப்புகள் இல்லை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் நேற்று இரவு தொடர்ந்து 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் கழிவு நீரும் கலந்த சென்றதால் வைகை ஆற்றில் ஒரு பகுதியான செல்லூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விஷ நுரை மிதக்க தொடங்கின. இந்த நுரையானது அதிகப்படியானதால் பாலத்திற்கு வெளியே வந்தது.

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை  தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு வந்த வீரர்கள், வைகை ஆற்றில் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த நுரையை நோக்கி தண்ணீரை பாய்ச்சி அடித்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.