Home அரசியல் ’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அதனாலும் மின்தடை ஏற்படுகிறது என்று செந்தில்பாலாஜி கூறினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் போட்டு வறுத்து எடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்களும் கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிட்டனர்.

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’
sv sekar

மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடி வருவதால் மின்தடை ஏற்படுகிறதா? விஞ்ஞானம்.. விஞ்ஞானம்.. என்று கமென்ட் அடித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ என்றும் கிண்டலடித்து இருந்தார். சென்னை மாநகராட்சியில் மின்சாரம் பூமிக்கு அடியில் செல்கின்றன என்பதை வைத்துதான் அவர் அப்படி கிண்டலடித்து இருந்தார்.

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

தான் சொன்ன பதில் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி இருப்பதை அடுத்து செந்தில்பாலாஜி, பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தார் அமைச்சர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம் என்று விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்தார் செந்தில்பாலாஜி.

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது தவறில்லை. ஆனால், அணில்களால் மட்டும் மின் தடை வராது. புறா, காக்கா போன்ற பறவைகள் டிராஸ்பார்மர் பியூஸ் கம்பியில் அமரும் போது ஷார்ட் ஆகி மின் தடை ஏற்படும். அது அங்கேயே இறந்து விட்டால் மின் வாரிய ஊழியர்தான் வந்து சரி செய்ய முடியும். கடந்த10 ஆண்டுகளில் எங்கள் மயிலாப்பூர் ஏரியாவில் பல தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடனே சரி செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால், தமிழ்நாடு மின் வாரிய என்ஜினியர்களை கேட்டுக்கொள்லாம். தமிழ்நாடு மின் வாரிய LINE WORKERSக்கு தலை வணங்குகிறே என்று தெரிவித்திருக்கிறார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.

அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா? என்று கேட்கிறார் திமுக பேச்சாளர் வே.மதிமாறன்.

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே...

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு...

இடஒதுக்கீடு உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் ராமதாஸ் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம்...
- Advertisment -
TopTamilNews