ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வியாபாரிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வியாபாரிகள் மகிழ்ச்சி

விஜயதசமி விடுமுறையையொட்டி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக ஒகேனக்கலில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வியாபாரிகள் மகிழ்ச்சி

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக கடந்த 22ஆம் தேதி முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், கடந்த 4 நாட்களாக ஒகேனக்கலுக்கு மிக சொற்பமான அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில், விஜயதசமி விடுமுறை தினமான இன்று ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மெயின் அருவியிலும், காவிரி ஆற்றிலும் குளித்தும், பரிசல் சவாரி சென்றும் ஒகேனக்கல்லை ரசித்தனர்.

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வியாபாரிகள் மகிழ்ச்சி

மேலும், ஆயில் மசாஜ் செய்துகொள்ளும் இடத்திலும் ஏராளமான கூட்டம் அலைமோதியது. அதேபோல, மீன் சமையல் செய்து தரும் பகுதியில் உணவு ஆர்டர் கொடுக்க சுற்றுலா பயணிகள் முண்டியடித்தனர். மொத்தத்தில், கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இது, அங்கிருக்கும் தொழிலாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வியாபாரிகள் மகிழ்ச்சி