வீக் எண்ட்ல கொடைக்கானல் போறீங்களா? உஷார்

 

வீக் எண்ட்ல கொடைக்கானல் போறீங்களா? உஷார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது.

கனமழை எதிரொலியால் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது. கொடைக்கானல் 12 மைல் சுற்றுலாத் தலங்களான தூண்பாறை குணா குகை, பைன் மரக் காடுகள், மற்றும் மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது, மீண்டும் சுற்றுலாத்தலங்கள் திறப்பது குறித்த மறு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kodaikanal Hill Station in Tamil Nadu is now open for tourists; e-passes  required | Times of India Travel

இதேபோல் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகம் மூடபட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகளுக்காக நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுடன் வாகன சவாரி மற்றும் நாளை காலை துவங்கும் என முதுமலை புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர் கௌசல் தெரிவித்துள்ளார். யானை சவாரி மற்றும் தங்கும் விடுதிகள் செயல்பட மேலும் சில நாட்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.