சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்

 

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்

தேனி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் லேசான காயமடைந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல்நேரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது வெயிலும், மதியம் முதலே பனிப்பொழிவும் தொடங்குகிறது. இதனால் ஹைவேவிஸ் மலை மிக ரம்மியமாக காட்சி அளிப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், இன்று ஹைவேவிஸ், மேல்மணலாறு, இரவங்கலாறு மலை பகுதிகளில் காலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்

அத்துடன் மலைமுகடுகள் மற்றும் மரங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டது. இதனால் மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் மலையடிவாரத்திற்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில், சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ்-க்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரவங்கலார் வளைவில் பள்ளத்தில் சிக்கியது. இதில் வேனில் பயணித்த 10 பேருக்கு, லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.