• February
    21
    Friday

Main Area

Mainபஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா?

பர்மா
பர்மா

இந்தியாவில் இருந்து பங்களாதேஷ், பூட்டான், நேப்பாள்,பாக்கிஸ்தான் போற மாதிரியே பர்மாவுக்கும் பஸ்ஸுலயே போகலாம்.சிங்கப்பூர்,மலேஷியாவோட ஒப்பிட்டா காசும் மிச்சம்,விசா ஆன் அரைவல் வசதி இருக்கறதால நினச்ச உடனே கிளம்பலாம்.

myanmar

கொஞ்சம் பணமும் நிறைய நேரமும் இருந்தால் போதும்.முதல்ல நீங்க செய்ய வேண்டியது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கிட்டு மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் போங்க.அங்க இருந்து ஒரு டாக்சி பிடிச்சுக்கிட்டு பர்மா பார்டர்ல இருக்கற மோராங்கற ஊர்ல போய் இறங்கனும்.ஆக்சுவலா அது ஒரு இரட்டை கிராமம்,நம்ம சைடு ஊர் மோரா,பார்டர கிராஸ் பண்ணுனா டாமு.ரெண்டு ஊர்லயுமே நிறைய தமிழ் முகங்கள பார்க்கலாம்,இட்லி தோசைலாங்கூட கிடைக்கும்.

mynamat tenple

டாமுல இருந்து,அடுத்த பெரிய நகரமான மண்டாலேக்கு நிறைய பஸ் இருக்கு.இது பர்மாவுல யங்கூன் (ரங்கூன்) நகரத்துக்கு அடுத்த பெரிய ஊர் இதுதானாம்.இது பர்மாவோட கலாச்சார தலை நகரம்,நமக்கு மதுரை மாதிரி.ஆனா எந்தப் பரபரப்பும் இல்லாத அமைதியோ அமைதியான ஊர்.


என்னென்ன பாக்கலாம் தெரியுமா? மண்டாலேல அதே பேர்ல ஒரு மலை இருக்கு 790 அடி உயர குட்டி மலை.அதுல ஒரு புத்தர் கோவில் இருக்கு,பர்மீஸ் புத்திஸ்டுகளோட முக்கியமான வழிபாட்டு தலம் இது. அடுத்தது, ஸ்வனண்டா மடாலயம்.உண்மையில இது ஒரு பழைய அரண்மனை. கடைசியாக பர்மாவை ஆண்ட மன்னன் தன் தந்தை நினைவாக கட்டுனது.

mynamar


அங்கிருந்து 180 கி.மீ போனால்  'பேகன்!'. இங்கிருந்து இன்னும் 800 கி.மீட்டர் போனால்த்தான் யங்கூன் வரும். அதுக்கு முந்தி இந்த பேகன பாருங்க.இது 13- வது நூற்றாண்டுல பர்மாவ ஆண்ட பேகன் வம்சத்தோட தலைநகரமா இருந்த ஊர்.அந்த மண்ணுல கால வச்ச உடனே இந்த பழமையை  நீங்க உணரலாம்.2000 புத்த மடாலயங்கள்,மண்டபங்கள்,விகாரைகள்னு எங்க பாத்தாலும் கோவில் ,கோவில் கோவில்தான்.

temple

முக்கிய கோவில்கள்... ஆனந்தா கோவில்,ஸ்வீஜியன் கோபுரம்,தத்பியான்னியூ கோவில்,தம்மயாங்யி கோவில்,சுலமானி இந்தக் கோயில்லாம் , அது அமைந்திருக்கின்ற  இடத்தாலயும்,அந்த கோவில்ல இருக்கற சிற்ப வேலைப்பாட்டலயும் ரொம்ப ஃபேமஸ்.

temple


அடுத்தது நம்ம இலக்கான யங்கூன்.சிங்கப்பூர் ,மலேயா மாதிரி 1930-ல்லேயே பத்துலட்சம் தமிழர்கள் வாழ்ந்த ஊர். சுலே பகோடாங்கற கோவிலை சுத்தித்தான் யங்கூன் ஊரே அமஞ்சிருக்கு.எங்க பாத்தாலும் பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தோட அடையாளமா பெரிய பெரிய காரைக் கட்டிடங்கள பாக்கலாம்.மாரியம்மன் கோவில் , முருகன் கோவிலும் பார்க்கலாம்.


இங்க என்னெல்லாம் பாக்கனும் தெரியுமா? மொதல்ல ஸ்வேடாகன் புத்தவிகாரை , பர்மாவிலேயே இதுதான் ரொம்ப புனிதமான கோவிலாம்.கெளதம புத்தரோட தலை முடிய இங்க பாதுகாத்து வச்சிருக்காங்க!

rangoon railway station

ரங்கூன் ரயில் நிலையம் இருக்கற ஏரியாவுல நம்ம ஊர் காசுக்கு 600 ரேஞ்சுல சிங்கிள் ரூம் கிடைக்கும். ரங்கூன சிம்பிளா சுத்திப்பாக ஈசி வழி நம்மள மாதிரி ஆளுங்களுகாகவே அவங்க விட்டு இருக்கற சர்குலர் ட்ரெயின புடிக்கறதுதான்.ஒரு டாலர்தான்  டிக்கெட்,அது ரங்கூன் ஊர சுத்தி இருக்கற கிராமங்கள் வழியா போக,நாம உள்ளூர் மக்களோட அன்றாட வாழ்க்கை எப்படி நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம்.வேணும்னா  ஒரு இடத்துல இறங்கி பொறுமையா சுத்திப்பாத்துட்டு பின்னாடியே வர்ற அடுத்த ரயில்ல ஏரிக்கலாம் .அதே டிக்கெட்தான். உணவும் நீங்க சென்னையிலயே பாக்கற அத்தோ,மொய்ஞோதான்.சைவர்களுக்கும் பஞ்சமில்லை நிறைய தமிழர் உணவகங்கள் இருக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.