பீகார் தேர்தல்: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி!

 

பீகார் தேர்தல்: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி!

பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவுகிறது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியும் நேரடியாக களம் கண்டது. ஆளும் அரசுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்த நிலையில், எதிர்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து.

பீகார் தேர்தல்: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி!

இந்த தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவி வருகிறது. அதாவது ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி தலா 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால் கடுமையான போட்டி நிலவுகிறது.