ஒரே மாதத்தில் 11.88 லட்சம் வாகனங்கள் விற்பனை.. ஆனாலும் விற்பனை சுமார்…

 

ஒரே மாதத்தில் 11.88 லட்சம் வாகனங்கள் விற்பனை.. ஆனாலும் விற்பனை சுமார்…

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை 26.81 சதவீதம் குறைந்து 11.88 லட்சம் வாகனங்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.

வாகன டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு 1,242 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வாகன பதிவு டேட்டா அடிப்படையில் அந்த மாதத்தில் நடந்த வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இரு சக்கர, 3 சக்கர, கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்பட ஒட்டு மொத்த அளவில் 11.88 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 26.81 சதவீதம் குறைவாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் 16.23 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

ஒரே மாதத்தில் 11.88 லட்சம் வாகனங்கள் விற்பனை.. ஆனாலும் விற்பனை சுமார்…
கார்கள்

2020 ஆகஸ்டில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 7.12 சதவீதம் குறைந்து 1.78 லட்சம் வாகனங்களாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 8.98 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 28.71 சதவீதம் குறைவாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 12.60 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

ஒரே மாதத்தில் 11.88 லட்சம் வாகனங்கள் விற்பனை.. ஆனாலும் விற்பனை சுமார்…
வர்த்தக வாகனங்கள்

2020 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 26,536 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகின. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 57.39 சதவீதம் குறைவாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 62,270 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த மாதம் 3 சக்கர வாகனங்கள் விற்பனை 69.51 சதவீதம் குறைந்து 16,857ஆக குறைந்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 55,293 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.