40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

 

40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் தற்போது முதன்மையான இடத்தில் இருப்பது இந்தியாதான். கடந்த இருவாரங்களாக உலகளவில் அதிக புதிய நோயாளிகள் அதிபரிப்பதும், அதிகமானவர்கள் இறப்பதும் இந்தியாவில்தான்.

40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 40,154 பேரும், பிரேசிலில் 37,387 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 97,859 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 51,22,846. ஆயினும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இறப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதும் ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும்.

கடந்த இரண்டு நாட்களாக மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களை இந்தியா கண்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.

40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மிக அதிக அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேசிய குணமடைதல் வீதமும் தொடர்ந்து உயர்ந்து இன்று 78.64 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

நாட்டில் இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைத் (40,25,079) தாண்டியுள்ளது. இவை தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட 30 லட்சம் (30,15,103) அதிகம் ஆகும்.

40 லட்சத்தைக் கடந்தது – இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

அதிக அளவிலான குணமடைபவர்களின் எண்ணிக்கையின் காரணமாக, கடந்த 30 நாட்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா (17,559) ஐந்தில் ஒரு பங்கு குணமடைதல்களுக்கு (21.22%) காரணமாக உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் (10,845), கர்நாடகா (6580), உத்திரப் பிரதேசம் (6476) மற்றும் தமிழ்நாடு (5768) ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 35.87 சதவீதம் குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.