அன்றே சொன்னது toptamilnews: 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

 

அன்றே சொன்னது toptamilnews: 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிதான் ஒன்று முதல் ஏழு இடங்களை பிடிக்கும் என்று சொல்லி வந்தன. நாம் தமிழர் கட்சி வெற்றி வாய்ப்பு குறித்து எந்த கருத்து கணிப்புகளும் சொல்லவில்லை. ஆனால் மற்றவை என்று குறிப்பிட்டன கருத்துக்கணிப்பு முடிவுகள்.

அன்றே சொன்னது toptamilnews: 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

அந்த ’மற்றவை’ என்பதில் நீங்கள் இல்லை சீமான் சார் என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி கமெண்ட் செய்திருந்தார். ஆனால், ஐந்து முனை போட்டியில் திமுக – அதிமுக அணிகள் மட்டுமே வென்றுள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரனும் தோல்வியுற்றதுதான் அவரது கட்சி்யினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அன்றே சொன்னது toptamilnews: 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பேச்சுக்கு இடையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வகிக்கப் போகும் கட்சி எது என்று என்ற பேச்சு எழுந்தது. பேச்சு என்பதைவிட விவாதம் என்பதாகத்தான் இருந்தது. தேமுதிக இந்த தேர்தலில் தனது சக்தியை இழந்து விட்டது. கடைசி நேரத்தில் தேர்தலுக்கு 2 நாளைக்கு முன்னர் அமமுகவிடம் அக்கட்சி கூட்டணி அமைத்த போதே தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்கிறார்கள். இதனால் மூன்றாவது இடம் அக்கட்சிக்கு கிடைக்கப் போவதில்லை என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அமமுகவை பொருத்தவரை அக்கட்சி வாங்கும் ஓட்டுகள் அனைத்தும் அதிமுக ஓட்டுகள் தான். ஒரு சில இடங்களை பெற்றாலும் கூட சில சதவிகிதம் பெற்றாலும் கூட அக்கட்சி மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை என்றார்கள்.

இதற்கு அடுத்தபடியாக இருப்பது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் தான். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அக்கட்சியும் சில வாக்கு சதவீதம் எடுக்கும் என்றும் எல்லோரும் நம்பினார்கள். அதேநேரம் நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் அக்கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்கள். அதனால் தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போகும் கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றார்கள்.

அதே மாதிரி, நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்று நாம் தமிழர் சோர்ந்து போயிருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் 3வது இடம் என்பது உற்சாக டானிக்காக அமைந்திருக்கிறது.

திரைப்பட இயக்குநர் சேரனும், ‘’மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்துள்ளார்.