“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

இந்தியாவில் சார்ஸ் கொரோனா வைரஸ் மரபணு தொடர்பாக (Indian SARS-CoV2 Consortium on Genomics) ஆய்வு செய்ய மூத்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் ஷாகித் ஜமீல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவானது வைரஸின் உருமாற்றம், அதன் பரவும் வேகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும். அதனடிப்படையில் மத்திய அரசு கொள்கை முடிவுகளை எடுக்கும். ஆனால் அரசோ இக்குழுவின் ஆலோசனைகளைக் காது கொடுத்து கேட்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் குழுவின் தலைவர் ஷாகித் ஜமீல் பதவி விலகியிருக்கிறார்.

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

தனது விலகல் குறித்து ஜமீல் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இந்தச் சமயத்தில் தான் எடுத்திருக்கும் முடிவு சரியானதது என்றும், இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவர் காரணங்களைச் சொல்லாவிட்டாலும் கடந்த வாரம் அமெரிக்க பத்திரிகையான The New York Times-க்கு அவர் எழுதிய கட்டுரை எளிதாக விளக்குகிறது. அந்தக் கட்டுரையில் மத்திய அரசை சரமாரியாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதில், கொரோனாவை மத்திய அரசு மிகவும் சாதாரணமாக கையாண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்காமலும் தடுப்பூசி பணியை வேகப்படுத்தாமலும் இருந்ததே இந்தியாவின் தற்போதைய நிலைக்கு மிக முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல கொரோனாவை எதிர்கொள்ள மிகப் பெரிய அளவில் முன்களப் பணியாளர்களும் மருத்துவ உபகரணங்களும் வேண்டும் என்று கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது அடுத்த காரணம் என்று சொல்லியிருக்கிறார். ஆதாரங்கள் அடிப்படையில் தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசோ பிடிவாதமாக இருந்து உதாசீனப்படுத்தியது என்கிறார்.

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

மேலும், “பல நாடுகளில் பல்வேறு வகையில் கொரோனா உருமாற்றம் அடைந்த சமயத்தில், இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் (B1.6.17) டிசம்பரில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை ஆய்வுசெய்து ஜனவரி மாதமே நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரமாண்ட பேரணியை நடத்தி தொற்று பரவலுக்கு வித்திட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் அலை ஆரம்பித்த சமயம் உத்தரகாண்ட் அரசு (பாஜக அரசு) கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்து மிகப்பெரிய தவறைச் செய்தது.

“இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல” – மத்திய அரசின் பிடிவாதத்தால் மூத்த அறிவியலாளர் திடீர் விலகல்!

இந்தப் போக்கு தான் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் மத்திய அரசும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் அறிவியலாளர்களை மதிக்கவில்லை என்பதை சுற்றி சுற்றி எழுதியிருந்த அவர், தற்போது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித உயிர்கள் இழப்பு நிரந்தர வடுவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று கட்டுரையை முடித்திருக்கிறார். அந்தக் கட்டுரையின் லிங்க் – https://www.nytimes.com/2021/05/13/opinion/india-coronavirus-vaccination.html