80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

 

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

சினிமா நட்சத்திரங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கும்… அந்த டாப் நட்சத்திரங்களே ஒருத்தருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அது ஸிங்கர் M.J. ஸ்ரீராம்க்குத்தான். இவரின் நட்புக்காகவே பிரபல இயக்குனர்கள் பலர் இவரைக் கட்டாயப்படுத்தி நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்… நேரலையில் பார்த்தால் உங்களுக்கே பல படங்கள் நினைவுக்கு வந்து போகலாம். ஆனால், இவருக்குப் பிடித்தது – எப்போதும் இசைதான்.

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

சென்னை, தி.நகரிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் ‘பிளாக் & வ்வொயிட் ‘ என்ற பெயரில் ஒரு 80’s இசைக் கச்சேரி நடக்கும். இந்த நாளில் இங்கு வரும் ரசிகர்கள் யாரென்று பார்த்தால் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என அத்தனை பேரையும் அன்றைய இரவில் அங்கே பார்க்க முடியும்.!

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டுக்கூட ஈஸியா வாங்கிடலாம்,இவரது கச்சேரிக்கு அந்த ஸ்டார் ஹோட்டலில் சீட் பிடிப்பது அவ்வளவு கஷ்டம்.! சாதாரண ஒரு ரசிகர் என்றால் மூன்று நாளைக்கு முன்னாடியே முன் பதிவு செய்யணும். ஸ்ரீராமின் 80’s பாடல்கள் வேற லெவல் என்பதால் இந்த நெருக்கடியைத் தவிர்க்க முடியாது என்பது அங்கே ரெகுலராகப் போய் வரும் ரசிகர்களுக்கும் இது தெரியும்.!

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

கொரோனா லாக்டவுன் ஆரம்பித்த பிறகு ‘பிளாக் & வ்வொயிட்’ நிகழ்ச்சியை நேரலையில் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீராம். இந்தப் பாண்டமிக் லைஃபில் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கவனம் செலுத்தி தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்… ஸ்ரீராம் ரசிகர்களுக்கு இந்த ஃபேஸ்புக் நேரலை நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பலாம்.

 

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நேரலையில் வருகிறார். தொடர்ச்சியாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு என வாரத்தில் மூன்று நாட்களிலும் இதே நேரத்தில் அவரது இசைக் கச்சேரியைக் கேட்கலாம். இந்த இசைக் கச்சேரியில் நாளை ஸ்ரீராமோடு சேர்ந்து அவரது மனைவி ஸ்ரீலேகாவும் இன்று பாடவிருக்கிறார்.யாரது ஸ்ரீலேகா என்று கேட்பவர்களுக்கு ; விக்ரம்-த்ரிஷா நடித்த சாமி படத்தில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா…’ பாட்டையும், அர்ஜுன் நடித்த ஒற்றன் படத்தில் ‘சின்ன வீடா வரட்டுமா… பெரிய வீடா வரட்டுமா…’ என்று வூடு கட்டி அடித்த ஸிங்கர். இந்த வரிசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும், வயசு வித்தியாசம் இல்லாமல் ஆட்டம் போட வைக்கும் ‘அட்றா சக்க.’ பாடல்கள்.

80-களின் வேற லெவல் பாடல்கள்… ஹிட் பாடகர்களின் லைவ் கச்சேரி.! மிஸ் பண்ணிராதீங்க

இந்த இருவரின் இன்றைய நிகழ்ச்சி உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்… உங்களுக்கு பிடித்தமான நட்சத்திரங்களோடு நீங்களும் இணைந்திருங்கள்…

லைவில் இணைந்திருக்க இந்த லிங்க்கை ‘க்ளிக்’ பண்ணவும்: https://www.facebook.com/morapakkam.shriram