Home வணிகம் வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்!

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்!

வரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 50 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது கவனிக்கத்தக்கது. ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன்பெய்ன்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளன.

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் உயர்வு பெற்று 14,738 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கான சில காரணங்களை வணிக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதுகுறித்த விவரம் பின்வருமாறு:

ஜோ பைடன் வரவு, பங்குச்சந்தை உயர்வு!

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். பதவியேற்றவுடன் 15 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனாவால் வீழ்ந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் விதமாக பைடனின் உத்தரவுகள் அமைந்துள்ளன.

இதனால் வால் ஸ்ட்ரிட் பங்குச்சந்தை உச்சத்தை தொட்டது. அது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது.

அதிக வருவாய் ஈட்டும் பெருநிறுவனங்கள்:

டாடா கன்சல்டிங் (TCS), இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை நல்ல வருவாயை ஈட்டி குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளன. இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டை எதிர்நோக்கும் முதலீட்டாளர்கள்:

கொரோனாவால் பொருளாதாரத்தில் மந்த நிலை தொடர்வதால், பிப்ரவரியில் (2021-22 நிதியாண்டு) தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டை நாடே எதிர்நோக்கியிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் பெருநிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமான அம்சங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்கால திட்டத்தில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதும் ஒரு காரணம் என்கின்றனர்.

லாபம் ஈட்டித்தரும் ஐபிஓ முதலீடுகளில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்:

Initial Public Offering – ஐபிஓ என்பது நிறுவனங்கள் முதல்முறையாக பங்குச்சந்தையில் பங்குகளை வெளியீடு செய்வது. 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபிஓக்கள் சக்கை போடு போட்டன. ஐஆர்சிடிசி ரயில் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில், சமீபமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ரெயில் ஃபைனான்ஸ் கார்ப் நிறுவனம் 4,633 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஐபிஓவை வெளியிட்டது. எதிர்பார்த்ததை விட 3.5 முறை சப்ஸ்கிரிப்ஷனை பெற்றது.

சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகளை விட முதலீட்டாளர்கள் வாங்க விரும்பும் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை சப்ஸ்கிரிப்ஷன் எனப்படுகிறது. மேற்கூறிய காரணத்தாலும் இன்று சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நிதி வரத்து அதிகரித்திருப்பதும் ஒரு காரணமாகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews