இலங்கை LPL போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்!

 

இலங்கை LPL போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்!

இந்தியாவில் ipl போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. கூடவே அணி நிர்வாகத்திற்கும் நல்ல லாபத்தைத் தந்துவருகிறது. அதனால், பல நாடுகளிலும் இதே பாணியைப் பின்பற்றி பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இலங்கையில் எல்.பி.எல் எனும் பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இலங்கை LPL போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்!

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.

இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் ஆடுவதற்காக ஏலம் விடப்பட்டது.

இலங்கை LPL போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்!

எல்.பி.எல் ஏலத்தில் கிறிஸ் கெயில், அஃப்ரிடி, லியாம் ப்ளங்கெட், டேவிட் மில்லர், டூ பிளஸி, ரஸல் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு தொகை என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட வில்லை.