• April
    06
    Monday

Main Area

Main



சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

IIT
IIT

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

IIT

இதில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடமும் பிடித்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம் 20 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 28 ஆவது இடத்தையும் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 32வது இடத்தையும் பிடித்துள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.