இந்தியாவுக்கு இன்டர்நெட் வந்து 25 வருஷம் ஆயிட்டு…. இன்டர்நெட் இணைப்பில் தமிழகம் 3வது இடம்

 

இந்தியாவுக்கு இன்டர்நெட் வந்து 25 வருஷம் ஆயிட்டு…. இன்டர்நெட் இணைப்பில் தமிழகம் 3வது இடம்

நம் நாட்டில் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டது. நம் நாட்டில் இன்டர்நெட் இணைப்பு அதிகம் உள்ள டாப் 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

நம் நாட்டில் இன்டர்நெட் முதல் முதலாக 1995 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அது முதல் பல துறைகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. நாம் இன்று வீட்டில் இருந்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம், வேண்டியவர்களுக்கு பணம் அனுப்பலாம், சினிமா, ரயில், பஸ், விமான டிக்கெட்டுகள் புக் செய்யலாம். கொரோனா காரணமாக ஐ.டி. உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளிலிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவுக்கு இன்டர்நெட் வந்து 25 வருஷம் ஆயிட்டு…. இன்டர்நெட் இணைப்பில் தமிழகம் 3வது இடம்
இன்டர்நெட்

இன்டர்நெட் என்ற ஒன்று இல்லையென்றால் இவற்றையெல்லாம் நினைத்து பார்க்க முடியாது. நம் நாட்டில் தற்போது 75 கோடி இன்டர்நெட் இணைப்புகள் உள்ளன. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் இன்டர்நெட் இணைப்பு இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2016 மார்ச் மாத நிலவரப்படி, நம் நாட்டில் 34 கோடி இன்டர்நெட் இணைப்புகள் இருந்தது. 2020 ஆகஸ்ட் மாத நிலவரப்படி இன்டர்நெட் இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியாக உயர்ந்துள்ளது. இன்டர்நெட் இணைப்புகளில் வயா்லெஸ் (மொபைல், டாங்கிள்) பங்கு 72.6 கோடியாக உள்ளது என்று டிராய் அறிக்கை கூறுகிறது. மேலும் கிராமப்புறங்களை காட்டிலும் நகர்புறங்களில் இன்டர்நெட் இணைப்புகள் அதிகம் உள்ளன.

இந்தியாவுக்கு இன்டர்நெட் வந்து 25 வருஷம் ஆயிட்டு…. இன்டர்நெட் இணைப்பில் தமிழகம் 3வது இடம்
இன்டர்நெட்

நம் நாட்டில் கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இன்டர்நெட் இணைப்பு அதிகம் உள்ள டாப் 5 மாநிலங்கள் பட்டியலில், 6.4 கோடி இன்டர்நெட் இணைப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா (5.9 கோடி இணைப்பு), தமிழகம் (5.1 கோடி இணைப்புகள்), கர்நாடகா (4.6 கோடி இணைப்புகள்) மற்றும் குஜராத் (4.5 கோடி இணைப்புகள்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.