இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!

 

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!

கொரோனாவல் அதிகம் பாதிப்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் புதிய நோயாளிகளின் அதிகளவில் எண்ணிக்கை உயரும் நாடுகளில் முதல் இடத்தில் இந்தியாவே கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது.  

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 14 லட்சத்து  85 ஆயிரத்து 777 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 726 நபர்கள்.

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 301 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,02,750 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 70,46,216 பேரும், இந்தியாவில் 55,62,663 பேரும், பிரேசில் நாட்டில்  45,60,083 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 22-ம் தேதி காலை 8 மணியளவில் இந்தியாவில் ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள் எவை என்ன பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!
கொரோனா வைரஸ்

முதல் இடம்: கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய நாள்முதலே மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு மொத்த பாதிப்பு 12,24,380. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 9,16,348. இறந்தவர்களின் எண்ணிக்கை 33,015. தற்போது சிகிச்சையில் இருப்போர் 2,75,017 பேர்.

இரண்டாம் இடம்:  கர்நாடாகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் கட்டுக்குள் வைத்திருந்தாலும் பிறகு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இங்கு மொத்த பாதிப்பு 5,26,876. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,23,377. இறந்தவர்களின் எண்ணிக்கை 8,145. தற்போது சிகிச்சையில் இருப்போர் 95,354 பேர்.

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!

மூன்றாம் இடம்:  ஆந்திர பிரதேசம். சில வாரங்களுக்கு முன் இரண்டாம் இடத்தில் இருந்தது தற்போது மூன்றாம் இடம். இங்கு மொத்த பாதிப்பு 6,31,749. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 5,51,821. இறந்தவர்களின் எண்ணிக்கை 5410. தற்போது சிகிச்சையில் இருப்போர் 74,518 பேர்.

நான்காம் இடம்: உத்திரப் பிரதேசமே நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு மொத்த பாதிப்பு 3,58,893. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 2,89,594. இறந்தவர்களின் எண்ணிக்கை 5135. தற்போது சிகிச்சையில் இருப்போர் 64,164 பேர்.

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்!

ஐந்தாம் இடம்:  தமிழ்நாடு தொடர்ந்து ஐந்தாம் இடத்திலேயே உள்ளது. இங்கு மொத்த பாதிப்பு 5,47,337. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,91,971. இறந்தவர்களின் எண்ணிக்கை 8871. தற்போது சிகிச்சையில் இருப்போர் 46,495 பேர்.

ஆறாம் இடத்தில் கேரளாவும், ஏழாம் இடத்தில் சட்டீஸ்கரும். எட்டாம் இடத்தில் ஒடிசாவும், ஒன்பதாம் இடத்தில் டெல்லியும், பத்தாம் இடத்தில் தெலுங்கானாவும் உள்ளன.