அசிம் பிரேம்ஜி முதல் பஜாஜ் குடும்பம் வரை… கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்கள்.. டாப் 10 கொடையாளர்கள்

அசிம் பிரேம்ஜி முதல் பஜாஜ் குடும்பம் வரை… கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்கள்.. டாப் 10 கொடையாளர்கள்

நம் நாட்டின் டாப் 10 கொடையாளர்கள் பட்டியலில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி முதல் பிடித்துள்ளார். ராகுல் பஜாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 10வது இடத்தை பிடித்துள்ளனர்.

நல்ல வசதி வாய்புகளுடன் இருந்தாலும் இருந்தாலும் பலர் தானம் தர்மம் செய்ய யோசிப்பார்கள். அவர்களிடம் பணம் இருக்கும் ஆனால் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஆனால் அசிம் பிரேம்ஜி போன்ற நபர்கள் தங்களது தங்களது சம்பாதித்தியத்தில் பெரும் பகுதியை பல்வேறு அறக்கட்டளை மற்றும் தொண்டு பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2019-20 ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 கொடையாளிகள் பட்டியலை ஹுருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் எடெல்கிவ் பவுன்டேஷன் வெளியிட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி முதல் பஜாஜ் குடும்பம் வரை… கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்கள்.. டாப் 10 கொடையாளர்கள்
அசிம் பிரேம்ஜி

இந்த பட்டியலில் முதலிடத்தை அசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவர் ஒருநாளைக்கு சராசரியாக ரூ.22 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் அசிம் பிரேம்ஜி நன்கொடையாக கொடுத்த தொகை மட்டும் ரூ.7,904 கோடியாம். இந்த பட்டியலில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் சிவ் நாடார், முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி குடும்பத்தினரும் இடம் பிடித்துள்ளனர்.

அசிம் பிரேம்ஜி முதல் பஜாஜ் குடும்பம் வரை… கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்கள்.. டாப் 10 கொடையாளர்கள்
முகேஷ் அம்பானி குடும்பத்தினர்

இந்தியாவின் டாப் 10 கொடையாளிகள்

  1. அசிம் பிரேம்ஜி (ரூ.7,904 கோடி)
  2. சிவ் நாடார் & குடும்பத்தினர் (ரூ.795 கோடி)
  3. முகேஷ் அம்பானி & குடும்பத்தினர் (ரூ.458 கோடி)
  4. குமார் மங்கலம் பிர்லா & குடும்பத்தினர் (ரூ.276 கோடி)
  5. அனில் அகர்வால் & குடும்பத்தினர் (ரூ.215 கோடி)
  6. அஜய் பிரமல் & குடும்பத்தினர் (ரூ.196 கோடி)
  7. நந்தன் நீல்கேனி (ரூ.159 கோடி)
  8. இந்துஜா சகோதரர்கள் (ரூ.133 கோடி)
  9. கவுதம் அதானி & குடும்பத்தினர் (ரூ.88 கோடி)
  10. ராகுல் பஜாஜ் & குடும்பத்தினர் (ரூ.74 கோடி)