ரேஷன் டெண்டரில் ஊழல்… உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!

 

ரேஷன் டெண்டரில் ஊழல்… உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!

கடந்தாண்டு அதிமுக தலைமையிலான அரசு விடுத்த பருப்பு டெண்டர் மூலம் 1,500 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றது என அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியது. இந்த ஊழலுக்கு அப்போதைய அதிமுக அமைச்சர் காமராஜ், துறை அதிகாரியான சுதாதேவி ஐஏஎஸ், ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியது. இதை எதிர்த்து இயக்கம் போராட்டம் நடத்தியும் அப்போதைய அரசால் கண்டுகொள்ளப்படவில்லை.

ரேஷன் டெண்டரில் ஊழல்… உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!

இவ்வளவு ஏன் திமுக அரசு பதவியேற்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு கூட துறை அதிகாரியான சுதாதேவி மூலம் 80 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. இச்சூழலில் அமைந்திருக்கும் புதிய அரசு கொரோனா நிவாரணமாக கருணாநிதி பிறந்தநாளன்று 13 வகையான ரேஷன் பொருட்களை அறிவித்திருந்தது. இதற்கான டெண்டரை ஆன்லைன் மூலமாக வெளியிட்டது. இந்த டெண்டரில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனம் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

தகவலறிந்து வி்ழித்துக்கொண்ட அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் குறித்தும், அந்த நிறுவனத்தை மீண்டும் உள்ளே நுழைத்தால் அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்தும் பதிவுசெய்து வந்தது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உணவுத் துறை அமைச்சரான சக்கரபாணிக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. அதாவது சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் துவரம் பருப்பை 143.50 ரூபாய்க்கு அரசுக்கு அந்நிறுவனம் விற்று முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியது. இதுபோல கடந்த ஒரு வாரங்களாக புகார் தெரிவித்திருந்தது.

ரேஷன் டெண்டரில் ஊழல்… உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!

புகாரின்பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி கிறிஸ்டி நிறுவனத்துக்கு கிலோ 143.5 ரூபாய்க்கு 20,000 டன் துவரம்பருப்பு என்று ஒதுக்கப்படவிருந்த டெண்டர் ரத்துசெய்யப்பட்டுள்ளது. திமுக அரசு பருப்பு கொள்முதல் குறித்த புது டெண்டரை வெளியிட்டு உள்ளது. அதில் பருப்பு கொள்முதல் விலை கிலோ ரூ.100க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், இதன்மூலம் 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும் என்று கூறியிருக்கிறது.