அதிகம் காபி அருந்துவது இதய பாதிப்பை ஏற்படுத்துமாம்! – புதிய ஆய்வில் தகவல்

 

அதிகம் காபி அருந்துவது இதய பாதிப்பை ஏற்படுத்துமாம்! – புதிய ஆய்வில் தகவல்

காலையில் எழுந்ததும் காபி இல்லாவிட்டால் பலருக்கு அன்றைய நாளே தொடங்காது. காபி மோகம் அதிகம் பேருக்கு உள்ளது. ஒன்று இரண்டு கப்புக்கு மேல் காபி குடித்துக்கொண்டிருப்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது. அதிக காபி குடிப்பது இதய ரத்த நாள பிரச்னையை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதிகம் காபி அருந்துவது இதய பாதிப்பை ஏற்படுத்துமாம்! – புதிய ஆய்வில் தகவல்

தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் ஆஸ்திரேலியன் சென்டர் பார் பிரிசிஷன் ஹெலத் ஆய்வாளர்கள் காபி குடிப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு ஆறு கப் அல்லது அதற்கு மேல் காபி குடிப்பவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு வருகிறது என்று இவர்கள் ஆய்வு செய்தனர்.

காபி குடிப்பது கெடுதலான விஷயம் இல்லை. அளவுக்கு மீறும்போதுதான் அது ஆபத்தாக முடிகிறது. காபி குடிப்பது நல்லதா கெட்டதா என்று உலகம் முழுக்க தொடர்ந்து பலரும் ஆய்வுகள் நடத்தியவண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய பல்கலைக் கழகமும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது மரபணு அளவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துகிறதா, கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் படிவதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு லிபிட் ப்ரொஃபைல் எனப்படும் மொத்த கொழுப்பு அளவில் மாறுபாடு இருந்ததையும் அது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எவ்வளவு அதிகமாக காபி குடிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக லிபிட் ஃப்ரொபைல் அதிகரிக்கும். இதற்கு காபியில் உள்ள கஃபெஸ்டால் என்ற மூலக்கூறு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் ஹிப்போனென் கூறுகையில், “காபி எல்லோருக்கும் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றாக இருப்பதால் அது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. எங்களுடைய ஆய்வில் அதிக அளவில் காபி குடிப்பது இதயத்துக்கு நலலது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இது ஏற்கனவே இதய பிரச்னை உள்ளவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கலாம். நம்மை பாதுகாக்க காபி அதிகம் அருந்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது” என்றார்.