நாளை விநாயகர் சதுர்த்தி – சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

 

நாளை விநாயகர் சதுர்த்தி – சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி – சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நாளை விநாயகர் சதுர்த்தி – சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

தனி நபர்கள் தங்களின் சிலைகளை கோயில்களில் வைத்தால் சிலைகளை அறநிலையத்துறை மூலம் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . நாளை பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சென்னை முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவர். வழிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.