மின் கட்டணம்… பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

 

மின் கட்டணம்… பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15ஆம் தேதி வரை நீடித்தது.

மின் கட்டணம்… பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையோடு முடிவடைவதால் தாமதமின்றி மின் கட்டணம் செலுத்துமாறும் கால தாமதம் செய்தால் அபராதத் தொகையுடன் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு நடத்தப்படாததால், சில மின் நுகர்வோர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் கணக்கீடு செய்யப்பட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் சில மின் நுகர்வோர்கள் கடந்த மார்ச் மாதக் கணக்கீட்டின் படி தொகையை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்தது. இது தொடர்பான முழு அறிவிப்பையும் ஏற்கனவே மின் வாரியம் வெளியிட்டது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பல இடங்களில் புகார் எழுந்து வரும் நிலையில், அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.