’13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை’ – செம்பரம்பாக்கம் ஆய்வுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

நிவர் புயல் எதிரொலி காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

’13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை’ – செம்பரம்பாக்கம் ஆய்வுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதால் பாதுகாப்பு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 7 மதகுகள் மூலம் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

’13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை’ – செம்பரம்பாக்கம் ஆய்வுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பை அடுத்து முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

’13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை’ – செம்பரம்பாக்கம் ஆய்வுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

கொட்டும் மழையில் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

’13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை’ – செம்பரம்பாக்கம் ஆய்வுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஏற்கனவே நிவர் புயல் முன்னெச்சரிக்கையையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.