காங்கிரஸின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு

 

காங்கிரஸின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு

போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை என தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் சிறு வியாபாரிகளை அழித்துவிட்டு, பெரிய வியாபாரிகள் கையில் விவசாய பொருளைக் கொடுத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அதனால் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு

இந்நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் டிராக்டரில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீநிவாசா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதனையடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாகனங்களை போராட்டத்திற்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.