ஸ்டெர்லைட் ஆலை திறப்பு- அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

 

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு- அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி, அதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்படி போராடிய மக்களை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தமிழக அரசோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த சூழலில் தற்போது கொரோனா பரவலை சாதமாக பயன்படுத்திக்கொண்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனைவருக்கும் இலவசமாக தருகிறோம். அதற்காக ஆலையை திறக்க அனுமதி கொடுங்கள் என கோரிக்கை விடுத்தது. இதனால் மத்திய அரசும் ஆலையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே த்ரிவித்தார். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளதாக கூறி வழக்கை ஏப்.26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார், அந்த வழக்கு நாளை மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு- அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவெடுக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவிருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் நாளை தலைமை செயலகத்தில் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.