ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?… முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு!

 

ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?… முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு!

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்தே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வை ரத்து செய்யக் கோருவது சாத்தியப்படாத நிலையில், தற்போது ஆட்சி தன்வசம் இருப்பதால் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் களமிறங்கியது திமுக அரசு. அதன் ஒரு பகுதியாக, நீட் தேர்வின் தாக்கத்தைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை நியமித்தது.

ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?… முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு!

நீட் தேர்வின் பாதிப்பை ஆராய்ந்து ஒரே மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. அதன் படி, ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வின் தாக்கத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கியது. நீட் தேர்வால் பாதிப்படைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தெரிவிக்கலாம் என அறிவித்தது. சுமார் 86,342 பேர் தங்களது கருத்துக்களை வழங்கினர். அதை ஒருங்கிணைத்து, முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை தயாரித்தது ஏ.கே.ராஜன் குழு.

இதனிடையே, ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இக்குழு அமைக்கப்படவில்லை. நீட் தேர்வின் தாக்கத்தை கண்டறிய திமுக அரசு குழு அமைத்ததில் எந்த தவறுமில்லை என்று கூறி பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். ஏ.கே.ராஜன் குழுவுக்கு இருந்த ஒரு சிக்கலும் தற்போது விலகிவிட்டது.

ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?… முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு!

இந்த நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்திருக்கும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? ரத்து செய்யப்படாதா? தேர்வு தயாராகலாமா? வேண்டாமா? போன்ற பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவை அனைத்திற்கும் நாளை விடை கிடைத்துவிடும்..!