• December
    16
    Monday

Main Area

Mainநாளை ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டத்தில் எதற்காக பூணூல் மாற்றுகிறோம்? 

avani avittam

நாளை ஆவணி அவிட்டம். அந்தணர்களின் தலையாய கடமைகளுள் முக்கியமானதாக கருதப்படுகிற ஆவணி அவிட்டம் நாளை கொண்டாடப்படுகிறது. அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். சிலர் கடல் கடந்து இருப்பதனாலும், சரியான சந்தர்ப்பங்கள் கிட்டாததனாலும் இதனைக் காலம் தாழ்த்திச் செய்கின்றனர். ஆனால், பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. 
இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம்  காயத்ரி மந்திரத்தை ஏற்றுக் கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதன் பொருளாகத் தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல் அணிந்து கொள்கிறோம்.  இதை வைத்துத் தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம்.
உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொள்வதற்கு குருவின்  அருகே அழைத்துச் செல்லுதல் என்று பொருள். இந்த வேதங்களைப் படிப்பதற்கான காலங்களை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 தக்ஷிணாயனம் என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள். உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். 

avani avittam

ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும் பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.
சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான் முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும் உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில் தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.
இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 
அதேபோல் பலரும் வீட்டிற்கே வாத்தியாரை வரவழைத்து பூணூலை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்வது முக்கியமாக இருந்தாலும், எதற்காக பூணூலை மாற்றிக் கொள்கிறோம் எனத் தெரியாமல், அதை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே செய்வது எத்தனைப் பெரிய தவறு
பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும். ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் செய்வது போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரி ஜபம் வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத் தான் காயத்ரி ஜபத்தை மறுநாள் வைத்து இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரி ஜபம், காயத்ரி ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினமும் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத் தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் காயத்ரி ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரி மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.
சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால் தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது.
'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கமும் சரியானது அல்ல.

2018 TopTamilNews. All rights reserved.