கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் : அதிர்ச்சியில் திரையுலகம்!

 

கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் : அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல தயாரிப்பாளர் போகுரி ராம ராவ் கொரோனா தொற்றால் பலியானார். அவருக்கு வயது 64.

கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் : அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,48,315 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3, 94, 227 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா படப்பிடிப்புகள் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் : அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்நிலையில்  ஈதரம் பிலிம்ஸ் தயாரிப்பாளரும் போகுரி பாபுராவின் சகோதரருமான போகுரி ராம ராவ் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.