TOLET – ரியல் உலக சினிமா; டோண்ட் மிஸ் இட்!

 

TOLET – ரியல் உலக சினிமா; டோண்ட் மிஸ் இட்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக திரைப்பட விழாக்கள். ஊடகங்கள், சோஷியல் நெட் ஒர்க் என எல்லா தளங்களிலும் பேசு பொருளாக இருந்த ஒரு டைட்டில்-TOLET.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக திரைப்பட விழாக்கள். ஊடகங்கள், சோஷியல் நெட் ஒர்க் என எல்லா தளங்களிலும் பேசு பொருளாக இருந்த ஒரு டைட்டில்-TOLET. 

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் உருவான இந்தப்படம், வாடகை வீட்டில் குடியிருக்கும் மனிதர்களை ஐ.டி கம்பெனிகளின் வருகைக்கு பிறகு எப்படியெல்லாம் துயரம் கொள்ள வைத்தது என்பதை, அவ்வளவு துல்லியமாக சொல்லியிருக்கிறது!

பணத்தாசை பிடித்த கவுஸ் ஓனர் மட்டும்தான் என்றில்லை, கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் வாழ்நாள் சேமிப்பை முடக்கிய ஸ்கூல் வாத்தியாரின் நினைப்பை நிராதரவாக்கி விட்டு வெளிநாடு போய்விட்ட மகனால், இவ்வளவுக்குத்தான் வாடகைக்கு  கொடுக்க முடியும் என்கிற அவர்களின் நிர்பந்தம்; என பல்வேறு தரப்பட்ட மனித மனங்களை பாசாங்கில்லாமல் பதிவு செய்திருக்கிறார் செழியன். முதல் முறையாக ஒரு உலகப்படம்.

tolet

பொதுவாக உலக திரைப்பட விழாவுக்கு என்று ஒரு வெர்சன். திரையரங்குக்கு ஒரு வெர்சன் என்று தான் என் அறிவுக்கு எட்டியவரை இங்குள்ள இயக்குனர்கள் தரம்பிரித்து பார்த்திருக்கிறேன். தமிழ் ரசிகர்களின் ‘தரம்’ எனக்கும் தெரியும் என்று, ஒரு பார்வையாளனாக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய அதே வெர்சனை திரையங்கிற்கும் கொண்டு வரும் உங்கள் நேர்மைக்கு; ஒரு ஹாட்ஸ் ஆஃப் செழியன் சார்.

வாடகை வீடு, அதன் தொடர்பாக எழுகிற உளவியல் சிக்கல் ஒவ்வொருவரோட மனநிலையில் எப்படி இருக்கும் என்பதை அவரவர் மனநிலையில் சொல்லியிருப்பது; ஆகச் சிறப்பு! அதிலும், அந்தக் குட்டிப்பையன் கேட்பானே…டி.வி சொந்தம், டி.வி.எஸ் பைக் சொந்தம்; வீடு மட்டும் ஏனப்பா சொந்தமில்ல!?” அவன் கேட்டுவிட்டான், கேட்க கூடாது என்று எத்தனை குழந்தைகள் மனசுக்குள் புதைத்து விட்டதோ யாருக்குத் தெரியும்!? 

tolet

கனவுகளை சுமந்து திரியும் கணவனுக்கு ஷீலா ராஜ்குமார் மாதிரி ஒரு இணை கிடைப்பது வரம்.நெருக்கடி நிலையில் கதையை விற்றுவிடலாம் என்று முடிவெடுக்கிற கணவனின் நிலை உணர்ந்து ‘நமக்கென்ன பொம்பளப்புள்ளையா இருக்கு? வித்திரு…காசு வந்தால் இது மாதிரி எவ்வளவு நகை வேணாலும் வாங்கிக்கலாம் என்பதாகட்டும்,”இந்த ஊருக்கு வந்தபோது வெறும் கையோடதானே வந்தோம்; நல்லாதானே இருக்கோம்!”என்று சொல்வதாகட்டும்,கனவுகளோடு கதை சொல்லித்திரியும் உதவி இயக்குனர் குடும்பங்களில் மகிழ்ச்சியும்;மாற்றமும் நிகழ்த்தக்கூடும்! 

tolet

இப்படியாக இந்தப் படம் குறித்து, சொல்லிச்செல்ல அநேக செய்திகள் உண்டு. சந்தோஷ் நம்பிராஜன்,ஷீலா ராஜ்குமார்,குட்டிப்பையன் என படத்தில் மொத்தமே 11 கதாபாத்திரங்கள்தான்; அப்புறம் நீங்களும் நானும்.

நதி, தன் வழித்தடத்தை தானே கண்டடையும் என்கிற இயற்கையின் விதி எப்போதும் தோற்றதில்லை! இந்தப்படமும் அந்த வகைதான்.