“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

எந்தவொரு விளையாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளாலும் இருந்தாலும் சரி சோதனைகளைத் தாண்டி சாதனைகளைப் பெறும்போது தான் நம்முடைய புருவத்தை விரிய வைப்பார்கள். இவர்களையா நாம் இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டோம் என எண்ணும் அளவிற்கு பிரமாண்ட வெற்றிபெற்று நமது கவனத்தை அவர்கள் மீது குவிக்க வைப்பார்கள். அப்படியான ஒருவர் தான் ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து. ஜூனியர் லெவலில் அதிக பதக்கங்களை வென்றாலும் அவரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது என்னவோ 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸ் தான்.

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

இந்தியர்கள் அனைவரும் சாய்னா நேவால் தான் பேட்மின்டனில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்க, அவரோ முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றத்தைப் பரிசளித்தார். இதற்குப் பின் பேட்மின்டன் பக்கம் இந்தியர்களின் கவனம் குறைய தொடங்கியது. ஆனால் அதுக்கெல்லாம் இங்கே சீனே இல்லை என்பது போல பி.வி. சிந்துவின் ஆட்டம் வெற்றித்தனமாக இருந்தது. ரவுண்ட் ஆஃப் 16,, காலிறுதி, அரையிறுதி என தன்னை எதிர்த்த அனைவரையும் துவம்சம் செய்து பைனலில் அடியெடுத்து வைத்தார். அவர் அப்போவே ஜெயித்துவிட்டார்.

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

பைனலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்த கரோலினா மரினுடன் மோதினார். அந்த ஆட்டத்தில் இறுதிவரை போராடியே வெற்றிவாய்ப்பை இழந்தார். அவர் பைனலில் நுழைந்தபோதே தங்கம் வென்றுவிட்டார். இந்த தோல்வியெல்லாம் பெரிதில்லை என ஒவ்வொரு இந்தியனையும் சொல்ல வைக்கும் அளவிற்கு விளையாடினார். வெள்ளிப் பதக்கம் வென்றாலும் அவர் தங்க மங்கையே. இந்தப் போட்டிக்குப் பின் சிந்து மீது அனைவரது கவனமும் திரும்பியது. அவர்களின் எதிர்பார்ப்பை சிந்துவும் பூர்த்திசெய்ய தவறவில்லை. 2018 காமென்வெல்த் போட்டியிலும் 2019 பாசெல் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று அசத்தினார்.

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

இதனால் இந்தாண்டு நடைபெறும் டோக்கியோ போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியது. அவர் நிச்சயம் இந்தியாவுக்காக தங்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் சுற்றில் இஸ்ரேலின் போலிகர்போவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய பி.வி. சிந்து போலிகர்போவை நிலைகுலைய வைத்தார். முதல் செட்டில் 21-7 என்ற கணக்கில் வென்ற அவர், இரண்டாவது செட்டில் 21-10 என்ற கணக்கில் ஜெயித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். உலக பேட்மின்டன் தரவரிசையில் 7ஆவது இடத்திலுள்ள சிந்து, அடுத்த சுற்றில் 34 இடத்தில் இருக்கும் ஹாங்காங்கின் சியுங் நகனிடன் மோதுவார்.