ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

 

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி சவாலுடன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது. 205 நாடுகளில் இருந்து 11,300 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் , பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை துவக்கி வைத்தார். இச்சூழலில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனின் லுட்மிலா விக்டோரிவ்னா கிச்செனோக்- நாடியா விக்டோரிவ்னா கிச்செனோக் ஜோடியுடன் மோதின. இவர்கள் இருவரும் சகோதரிகள்.

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

இந்தியா தரப்பில் சானியா மிர்சா அனுபவமிக்க வீராங்கனை. அங்கிதா ரெய்னாவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ் போட்டி. அனுபவமும் இளம் ரத்தத்தின் வேகமும் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், உக்ரைன் சகோதரிகளின் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் 6-0, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் உக்ரைன் சகோதரிகளிடம் சானியா ஜோடி வீழ்ந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் வெளியேறினர். இதன்மூலம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு கலைந்தது.