டோக்கியோவில் வாகை சூடிய மீராபாய் சானு தாயகம் திரும்பினார் – தரையிறங்கியதும் சர்ப்ரைஸ் கொடுத்த அரசு!

 

டோக்கியோவில் வாகை சூடிய மீராபாய் சானு தாயகம் திரும்பினார் – தரையிறங்கியதும் சர்ப்ரைஸ் கொடுத்த அரசு!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முதல் நாளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவிற்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், வெள்ளிப் பதக்கம் வென்று ஆறுதல் அளித்தார் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு. மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ஒரே வீராங்கனை மீரா பாய் தான். மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இவருக்கும் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சி ஹூய்க்கும் 8 கிலோவே வித்தியாசம். அவர் 210 கிலோ தூக்கி முதலிடம் பிடித்திருந்தார்.

டோக்கியோவில் வாகை சூடிய மீராபாய் சானு தாயகம் திரும்பினார் – தரையிறங்கியதும் சர்ப்ரைஸ் கொடுத்த அரசு!

தற்போது அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவிருக்கிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானால் வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. பளுதூக்குதலில் இந்தியாவுக்கு அடுத்து ஒரு பதக்கம் கிடைக்க 21 வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதே அவரின் வெற்றிக்கான கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது. 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் கர்னம் மல்லேஸ்வரி பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு மீரா பாய் தற்போது தான் இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் இவர். இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று கொடுத்தவர் என்பதால் ஸ்பெஷலாக கவனம் பெறுகிறார். கூடுதலாக ஸ்பெஷலாக கவனிக்கவும்படுகிறார். மீரா பாய் சானு இன்று தாயகம் திரும்புவதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மீரா பாய் சானு தரையிறங்கியுள்ளார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடை அவரை கூடுதல் எஸ்பியாக நியமிக்கவிருப்பதாக மணிப்பூர் அரசு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.