ஒலிம்பிக்கில் சாதனை : பி.வி. சிந்துவுக்கு குவியும் தலைவர்களின் வாழ்த்து!

 

ஒலிம்பிக்கில் சாதனை : பி.வி. சிந்துவுக்கு குவியும் தலைவர்களின் வாழ்த்து!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் என்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து தைவான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்க பதக்கத்திற்கான வாய்ப்பு சிந்துவிடம் இருந்து பறிபோனது. இருப்பினும் மனம் தளராது வெண்கல பதக்கத்திற்காக சீன வீராங்கனையை எதிர்கொண்டு சிந்து களமிறங்கினார்.

ஒலிம்பிக்கில் சாதனை : பி.வி. சிந்துவுக்கு குவியும் தலைவர்களின் வாழ்த்து!

இந்த போட்டியில் 21-13, 21-15 நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை செய்து பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ,பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், “தனது சிறப்பான ஆட்டத்தால் பேட்மிண்டன் போட்டி ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ள பிவி சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை அவர் வருங்காலத்தில் வெல்ல வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, “தங்கத்தை தவறவிட்டாலும் சீன வீராங்கனையை பந்தாடி வெண்கல பதக்கம் வென்று பாரத தாய்க்கு மகுடம் சூட்டிய சாதனை பெண்மணி பி.வி.சிந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும்… பாராட்டுகளும்…” என்று குறிப்பிட்டுள்ளார்