வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி!

 

வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி!

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் துனிஷிய வீராங்கனை பென் அசிசியை எதிர்கொண்ட நிலையில் தனது சிறப்பான வாள் வீச்சின் மூலம் 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் பென் அசிசியை தோல்வியடைய செய்தார். சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள்வித்தை போட்டியில் முதன்முறையாக களமிறங்கி, தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி!

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சில் சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தார். 15 – 7 என்ற புள்ளிகள் கணக்கில் பவானிதேவியை பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனைட் வீழ்த்தினார்.

வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி!

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து வாள் வீச்சு பயிற்சி பெற்றுவரும் பவானிதேவி 2004ஆம் ஆண்டு முதல் பள்ளி அளவிலான வாழ்வு போட்டியில் கலந்துகொண்டார். இதையடுத்து தனது 14 வயதில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட அவர் மலேசியாவில் நடைபெற்ற 2009 பொதுநல விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றார்.2010 ஆம் ஆண்டில் பிலிப்பீன்சுவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இவர் .2012ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநல விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார்.