Home விளையாட்டு ஒலிம்பிக் முதல் நாளை வெள்ளி பதக்கத்துடன் நிறைவு செய்துள்ளது இந்தியா

ஒலிம்பிக் முதல் நாளை வெள்ளி பதக்கத்துடன் நிறைவு செய்துள்ளது இந்தியா

2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணிக்கு ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக் முதல் நாளை வெள்ளி பதக்கத்துடன் நிறைவு செய்துள்ளது இந்தியா
Tokyo Olympics 2021: Mirabai Chanu opens India medal tally at Tokyo Olympics

பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ மகளிர் எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 202 கிலோ அளவு எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி பிறகு பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் சீன வீராங்கனை ஹூ ஜிஹுய் 210 கிலோ அளவு எடை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸை பொருத்தவரை சுமித் நகல் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் , 1996ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ்க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் பெரும் வெற்றி இதுவாகும்.

ஹாக்கியை பொறுத்தவரை இந்திய ஆடவர் அணி நியூசிலாந்து அணியை 3 – 2 என்ற கணக்கில் வீழ்த்தியது , இந்திய பெண்கள் அணி நெதர்லாந்திடம் 5 – 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

துப்பாக்கி சுடுதல் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் , இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தகுதிச்சுற்றில் முதலிடத்தை பிடித்தார் , இவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதிப்போட்டியில் 7வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இதே பிரிவில் பெண்கள் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் மற்றும் அபூர்வி சண்டிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறி வெளியேறினர்.

வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இணை காலிறுதியில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது வெளியேறியது.

பேட்மிட்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாய் பிரவீன் தோல்வியடைந்து வெளியேறினாலும் சாத்விக் சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இரட்டையர் பிரிவில் வெற்றியுடன் துவங்கினார்.

டேபிள் டென்னிஸை பொறுத்தவரை கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சரத் கமல் மற்றும் மணிக்கா பத்ரா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிக்கா பத்ரா மற்றும் முகர்ஜி ஆகியோர் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்

குத்துச்சண்டை பொருத்தவரை இந்தியாவின் நட்சத்திர வீரர் விகாஸ் கிருஷ்ணன் ஜப்பானிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் பதக்க பட்டியலில் இந்தியா 12 வது இடத்தில் உள்ளது. டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஆண்கள் ஹாக்கி , பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ஒலிம்பிக் முதல் நாளை வெள்ளி பதக்கத்துடன் நிறைவு செய்துள்ளது இந்தியா

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரு வந்தவங்க அதை குறுகுறுன்னு பார்க்காம ,விறு விறுன்னு இதெல்லாம் செய்யுங்க

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை....

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.
TopTamilNews