இந்தியாவிற்கு நம்பிக்கை தரும் நன்னாள்… காலிறுதிக்குள் ஹெவிவெய்ட் சாம்பியன் சதிஷ் குமார்!

 

இந்தியாவிற்கு நம்பிக்கை தரும் நன்னாள்… காலிறுதிக்குள் ஹெவிவெய்ட் சாம்பியன் சதிஷ் குமார்!

ஒலிம்பிக் தொடரிலிருந்து ஒரு வாரத்திற்குப் பின் இந்தியர்களுக்கு நற்செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இந்திய வீரர், வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பதே அந்தச் செய்தி. இவர்கள் காலிறுதியில் வென்றால் அரையிறுதிச் சென்றுவிடுவார்கள். அப்படி சென்றுவிட்டால் அவர்கள் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் நிச்சயமாகக் கிடைத்துவிடும். அரையிறுதியிலும் வெற்றிபெறுவார்கள் என்று நாம் நம்பிக்கை வைப்போம்.

இந்தியாவிற்கு நம்பிக்கை தரும் நன்னாள்… காலிறுதிக்குள் ஹெவிவெய்ட் சாம்பியன் சதிஷ் குமார்!

நேற்று குத்துச்சண்டையில் பூஜா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு முன்னேறினார். இன்று ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சதிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 91 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொள்ளும் இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமை இவருக்குண்டு. அதேபோல இரு முறை ஆசியன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜமைக்கா நாட்டின் ரிச்சர்டோ பிரவுனுடன் மோதினார்.

Satish Kumar's desire to overcome challenges made him a history-maker

போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சதிஷ் குமார் ஆதிக்கம் செலுத்தினார். ஒவ்வொரு பஞ்ச்சிலும் ஜமைக்கா வீரர் பிரவுனை நிலைகுலைய செய்தார். ஒவ்வொரு சுற்றிலும் வரிசையாக வென்று வந்த சதிஷ் குமார் ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றிபெறவில்லை. ஆனால் அதுவெல்லாம் அவர் காலிறுதிக்குள் நுழைவதை தடுக்க போதுமானதாக இல்லை. முடிவில் 4-1 என்ற கணக்கில் பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இவர் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோவ் உடன் மோதுகிறார். இதில் வென்றால் வெண்கலப் பதக்கம் நிச்சயம்.