இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி மிக முக்கியமானது. இதனால் இந்தப் போட்டி மட்டும் எப்போதுமே தனி கவனம் பெறும். ஒலிம்பிக்கில் இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஃபூல் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இந்திய அணியுடன் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தியது.

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

வெற்றிக்களிப்புடன் அடுத்த ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்திய வீரர்களை யோசிக்கவே விடாமல் கோல் மழை பொழிந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் ஆரம்பித்த கோல் மழை ஆட்டம் முடியும் வரை விடாமல் பொழிந்தது. இந்திய வீரர்கள் திக்குமுக்காடி விட்டனர். ஆட்டத்தின் முடிவில் 1-7 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக தோற்றது.

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

லீக் சுற்றின் மூன்றாவது போட்டியில் ஸ்பெயினுடன் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் கோல் அடிக்க முனைப்பு காட்டி வந்தனர். அதில் வெற்றியும் கண்டனர். ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்து கோல் கணக்கை துவக்கி வைத்தார். முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி வாகை சூடியது. ஆஸ்திரேலியாவிடம் தோற்ற வெறியை ஸ்பெயினுடன் மோதி இந்தியா தீர்த்துக் கொண்டது.

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

இச்சூழலில் இன்று நான்காவது போட்டியில் அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. இந்தப் போட்டியை வென்றால் காலிறுதி கன்பார்ம் என்ற உற்சாகத்துடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் அதேவளையில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுடன் மோதுவது சிறு அச்சத்தையும் எழுப்பாமல் இல்லை. எதுவாகினும் ஒரு கை போட்டு பார்த்திடலாம் என்பது போல ஆடிய இந்திய வீரர்கள் அர்ஜென்டினாவை ஆட்டம் காண வைத்தனர். ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் டிபென்ஸ் மோடில் ஆடினார்கள்.

இன்னும் ஒரு வெற்றி தான்… பதக்கம் நிச்சயம் – அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஹாக்கி அணி!

இதனால் இரு பக்கமும் கோலே அடிக்கவில்லை. இந்த டெட்லாக்கை 43ஆவது நிமிடம் இந்தியா தகர்த்து கோல் அடித்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை நீண்ட நேரம் நிலைக்க விடாமல் 48ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா கோல் அடிக்க பரபரப்பு நிலைக்குச் சென்றது. யார் அடுத்த கோல் அடிக்க போகீறார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவினாலும் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் அனுமதிக்கவில்லை. ஆனால் சர்ப்ரைஸாக ஆட்டம் முடியும் தருவாயில் 56,58ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை போட்டு நடப்பு சாம்பியனை நடையைக் கட்ட வைத்தனர். 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அட்டகாசமாக காலிறுதிக்குள் இந்தியா நுழைந்தது.